BridgeToFuture

Your online partner!


HEALTH CARE - சுகாதாரப் பாதுகாப்பு


COVID-19 கிராமங்கள், நகரங்கள் என்று அனைத்து தரப்பினரையும் தாக்கியுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் மருத்துவ சேவையை அணுக முடியாமல் இறப்பதைப் காண்கிறோம். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு பாராமல் இந்த வைரஸ் தாக்குவதை அறிவோம்.

ஆனால், இப்போது COVID-19 மூன்றாவது அலை பற்றி ஒரு பேச்சு உள்ளது, மூன்றாவது அலையின் சாத்தியம் குறித்த உண்மையை ஆராய்வோம்.

எந்த சுவாச வைரஸ் தொற்றுநோயும் (respiratory viral infection) 1918 ஸ்பானிஷ் காய்ச்சலைப் (Spanish Flu) போல ஆபத்தானது அல்ல. இந்த நோய் மூன்று அலைகளைப் பின்பற்றியது என்பதை யுனைடெட் கிங்டம் (united kingdom) தரவுகள் நமக்குக் காட்டுகின்றன. முதல் அல்லது மூன்றாவது அலைகளை விட இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானது மற்றும் நீண்ட காலம் நீடிப்பதாகும்.

முதல் அலை பொதுவாக மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை பாதிக்கிறது: முதியோர்கள், நோய்வாய்ப்பட்ட மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் பொதுவாக வைரஸ் மரபணு மாற்றங்களால் (mutant strains) ஏற்படுகின்றன.



ஸ்பானிஷ் காய்ச்சலைப் (Spanish Flu) பொறுத்தவரையில், முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட அழிவு மற்றும் ஆய்வக கண்காணிப்பு திறன் இல்லாமை (lack of laboratory surveillance capacity) ஆகியவை பரவலை அதிகரிப்பதிலும் இறப்பு விகிதத்தை அதிகரிப்பதிலும் ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம்; ஆனால் அந்த தரவுகள் நிச்சயமாக COVID-19 விஷயத்தில் பொருந்தும்.

ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish Flu) வைரஸ் மற்றும் COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டாலும் அவை பைலோஜெனெட்டிக் (phylogenetically) முறையில் மிகவும் வேறுபட்டவை. எனவே, வைரஸ் தொற்றுநோய்களின் மூன்றாவது அலைகளை எதிர்பார்ப்பது மற்றும் அதற்குத் தயாராக இருப்பது மட்டுமே இப்போதை ஒரே வழி.

COVID-19 நோய்த்தொற்றுகளுக்கு எதிராக நம்மிடம் உள்ள மிக சக்திவாய்ந்த கருவி தடுப்பூசி. உருமாறிய வைரஸ் எதிராக பல்வேறு தடுப்பூசிகளால் வழங்கப்படும் பாதுகாப்பின் அளவு குறித்த உறுதியான தகவல்கள் நம்மிடம் இல்லை என்றாலும், கடுமையான தொற்றுநோய்களுக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பு இருப்பதாக பெரும்பாலான வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, தடுப்பூசிகளை நம்பியிருப்பது மூன்றாவது அலையைத் தடுக்க ஒருவகையான வழி.

இந்த தொற்றுநோய் நமது சுகாதார அமைப்பில் உள்ள குறைபாடுகளை நமக்குக் காட்டியுள்ளதுடன், கடந்த அரை நூற்றாண்டு காலமாக பொது சுகாதாரத்தில் முறையான முதலீடு இல்லாததையும் உணர்த்தியுள்ளது. அனைத்து மக்களுக்கும் சமமான சுகாதார அமைப்பை உருவாக்குவது, எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான (அல்லது பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான) ஒரே தீர்வாக இருக்கலாம்.