BridgeToFuture

Your online partner!


TECHNOLOGY - தொழில்நுட்பம்

Published on: 20-May-2021


10 ஆண்டுகளுக்கு மேலாக சிறிய வயதினரிடையே மனச்சோர்வு மற்றும் தற்கொலை விகிதங்கள் அதிகரித்து வருவதால், சமூக ஊடகங்கள் பயன்பாட்டிற்கும் - மனச்சோர்வு ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு இருக்கக்கூடும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

பேஸ்புக் தனது தயாரிப்புகளை இளைய மக்கள்தொகைக்கு கொண்டு வர முயற்சிப்பதால், கடந்த வாரம் 40 மாநில அட்டர்னி ஜெனரல் குழு, தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) 13 வயதிற்குட்பட்டவர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்படும் இன்ஸ்டாகிராமின் (Instagram - பேஸ்புக்கிற்கு சொந்தமானது) ஒரு பதிப்பை உருவாக்கும் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக என்.பி.சி (NBC) தெரிவித்துள்ளது.



"சமூக ஊடகப் பயன்பாட்டிற்கும் மனச்சோர்வுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதைக் காட்டும் தொடர்பு சான்றுகள் இந்த கட்டத்தில் மிகவும் உறுதியானவை" என்று டியாகோ மாநில பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஜீன் ட்வெங்கே NPR இடம் கூறினார்.

"சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்கும் இளம் வயதினர்கள் மனச்சோர்வடைந்து அல்லது மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை நாம் அனைவரும் கண்டறிந்தது மற்றும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் அதனை காட்டுகின்றன," என்று அவர் கூறினார்.

அதே விசாரணையின்போது, ஜுக்கர்பெர்க் (Zuckerberg) தனது நிறுவனம் குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களின் மனநல பாதிப்புகளை ஆய்வு செய்து வருவதாக வெளிப்படுத்தினார் - ஆனால் அதன் முடிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.