BridgeToFuture

Your online partner!


TEXTILE - ஜவுளி

Published on: 27-May-2021


உங்கள் சட்டை நீங்கள் வியர்த்ததை உணர்ந்து அதன் வெப்பநிலையை சரிசெய்ய முடிந்தால்? அல்லது நீங்கள் கீழேவிழுந்து அடிப்படுகையில் உங்கள் ஆடை அதை கவனித்து காயங்களின் தொடக்கத்தில் உங்களை எச்சரிக்க முடிந்தால்? இதுதான் எதிர்காலத்தில் இருக்கக்கூடும் என்று ஜவுளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான தொழில்நுட்பங்கள் சாத்தியமாகக்கூடுமா? ஒரு தொழில்நுட்பம் நுகர்வோரை அடைய சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானிகள் இத்தகைய தொழில்நுட்பத்தை பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம், ஆப்பிள் நிறுவனம் தனது தொழில்நுட்ப தயாரிப்புகளான ஐபோன், ஜ-வாட்ச் மற்றும் ஐ-மேக் கணினிகள் ஆகியவற்றை நாம் அணிந்திருக்கும் துணிகள் மூலம் கட்டுப்பாடுகளைத் தூண்டக்கூடிய ஸ்மார்ட் “துணி அடிப்படையிலான பட்டன்கள்” ("fabric-based buttons") காப்புரிமை பெற்றுள்ளது.

அதேபோல், சாம்சங் நிறுவனம், துணிகள் தேவைக்கேற்ப வண்ணங்கள் மாற்றக்கூடிய “ஸ்மார்ட் ஆடை” ("smart garment") காப்புரிமை பெற்றுள்ளது.

2015-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஜாகார்ட் ஸ்மார்ட் துணி (Project Jacquard by Google) பிரிவை அறிமுகப்படுத்தியது. மேலும் பல நிறுவனங்கள் இப்பொது ஸ்மார்ட் ஜவுளி தொழில்நுட்பத்தை மேன்படுத்த முயற்சிக்கின்றனர். இது முன்னர் சாத்தியமானவற்றின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தும்.