BridgeToFuture

Your online partner!


TRANSPORTATION - போக்குவரத்து

Published on: 12-May-2021

போக்குவரத்து துறையில் தொழில்நுட்பம் கொண்டு புதிய புரட்சி வரவுள்ளது. இது போக்குவரத்துத் தொழிலுக்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான கட்டமாக இருக்கும். வரவிருக்கும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து தொழில்நுட்ப மாற்றங்களை காணுங்கள்.
Lightweight Vehicles (இலகுரக வாகனங்கள்)



ஆட்டோமொபைல் (Automobile) உற்பத்தியாளர்கள் திறமையான வாகனங்களை வழங்குவதற்கும் அதிக செயல்திறனைக் கொடுப்பதற்கும் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள். வாகனத்தின் எடையை 10% குறைப்பது எரிபொருள் செயல்திறனை 6% அல்லது அதற்கு மேற்பட்டதாக மேம்படுத்த ஆய்வுகள் நடக்கின்றன. கூடிய விரைவில் Lightweight Vehicles சாலைகளில் பார்க்கலாம்.

Delivery Drones (டெலிவரி ட்ரோன்கள்)



அமேசான் (Amazon), டிஎச்எல் (DHL) போன்ற நிறுவனங்கள் வேகமான டெலிவரி (delivery) விநியோகத்திற்கான ட்ரோன்களை (Drones) உருவாக்க வேலை செய்கின்றன. இனி பொருட்களை மனிதர்கள் டெலிவரி செய்யாமல், ட்ரோன்கள் டெலிவரி செய்யக்கூடும்.

Bicycle Sharing System (சைக்கிள் பகிர்வு அமைப்பு)



பிரதான போக்குவரத்து சேவைகலில் பயணிக்க விரும்பாத பயனர்கள் சைக்கிளை மாற்றாகப் பயன்படுத்தலாம். இதனால் காற்று மாசுபாடு குறையும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த சேவை வெளிநாடுகளில் பிரதானமாக உள்ளது. இந்தியாவில் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த சேவையின் முன்னோட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Hyperloop (ஹைப்பர்லூப்)



ஹைப்பர்லூப் (Hyperloop) என்பது போக்குவரத்துத் துறையில் மிகவும் பிரபலமான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். பயனர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு 700 மைல் வேகத்தில் பயணிக்க முடியும். ஹைப்பர்லூப் திட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உருவாகின்றன. உள்-நகர போக்குவரத்தின் சிக்கலைக் குறைக்க இந்த திட்டம் உதவும். இது போக்குவரத்து துறையில் ஒரு முழுமையான புரட்சியாக இருக்கும்.

Flying Taxis (பறக்கும் டாக்சிகள்)



பறக்கும் டாக்சிகள் போக்குவரத்து துறையின் எதிர்காலமாக இருக்கும். நாசாவின் உதவியுடன் 2023 க்குள் பறக்கும் டாக்சிகளுடன் வருவதாக உபெர் (Uber) நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, துபாயில் வோலோகாப்டர் (Volocopter) சோதனைக்கு உட்பட்டுள்ளது.

Autonomous Cars (தானியங்கி கார்கள்)



IoT, AI, LiDAR போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் தானியங்கி கார்கள் கனவில் இருந்து உண்மைக்கு மாறிவிட்டன. இதன் சோதனை உலகளவில் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. டெஸ்லா (tesla) மற்றும் வேமோ (waymo) போன்ற நிறுவனங்கள் தானியங்கி புரட்சியின் முன்னணியில் உள்ளன. ஒரு தானியங்கி கார் மனிதனால் இயக்கப்படும் கார்களை விட பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது, ஏனெனில் அவை மனித பிழைகளை சமாளிக்க முடியும்.